முதலில் மெல்லிசைமன்னரின் ரசிகன் நான். நமது காலத்தில் இளையராஜா ரசிகன்.M.R.Vijayakrishnan

Dear friends
Mr Sounther is posting these articles in facebook too .We have exchanged our views ,Members can join .I have invited him to this forum too
மெல்லிசை மன்னர் தவிர வேறொரு இசை அமைப்பாளரும் இவ்வளவு ஆளுமைகளை தனது CAREER முழுவதும் சந்தித்தது இல்லை என்பது நிதர்சனமான உண்மை .மாடர்ன் ஏவிஎம் ஜெமினி விஜயவாஹினி பாலாஜி MGR சிவாஜி பந்துலு ஸ்ரீதர் KB ஒரு உதாரணத்திற்கு
இத்தனையும் மீறி ,ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு ஆஸ்தான மாமேதைகளான இசைஅமைப்பாளர்களையும் தவிர்த்து வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தனது படைப்புகளை 60 வருடங்களுக்கு மேலாக இன்றும் கேட்க வைத்திருக்கும் ஒரு இசை அமைப்பாளரைப் பற்றி போற்றும் விதத்தில் இந்தக் கட்டுரை அமைந்திருப்பதாய் தெரியவில்லை .
உங்களின் கருத்துக்களைப் பிரச்சார படுத்தும் விதமாக உங்களின் கட்டுரையில் சில இடங்கள் அமைந்துள்ளது நீங்கள் சொன்ன இதிகாச புராணங்கள் பார்ப்பனர்களால் எழுதப்பட்டதும் அல்ல ,பார்ப்பனீயம் என்று நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அளவிற்கு (அகண்ட பாரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் ) பார்ப்பனர்களும் என்றும் இருந்ததில்லை .இன்றைய விஷ விஷம கருத்துக்களை பரப்பும் ஊடக வழிமுறையும் அன்று இல்லை .நல்ல கருத்துக்கள் நாடெங்கும் பரவியது என்பதே உண்மை. நிறைய நீதி நூற்களும் அந்தந்த வட்டாரத்தை சார்ந்த வீரக் கதைகளும் தேவையானவையும் சொல்லித்தரப்பட்டது பாடசாலைகளில் கூத்து முறையில் உங்களுக்கு அது பிரசாரம் இந்த குழுவிற்கு தேவையில்லாத சொற்றொடர் எனவே மேற்கொண்டு இதில் விவாதிக்க தயார்இல்லை
எந்த ஒருபடைப்புமே ஒன்றிலிருந்து தான் ஒன்றாக வந்துள்ளது அமீபா டு மனிதன் உட்பட.
மெல்லிசை மன்னரின் ரசிகர் கூட்டத்தில் எத்தனை நீங்கள் பங்கு பெற்று உள்ளீர்கள் என்று தெரியவில்லை . கருத்துக்கள் பதியப்பெறுகின்றன அதில் உங்களுக்கு மறுப்பு இருந்தால் சொல்லுங்கள் .தவறினை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுங்கள் .மெல்லிசை மன்னரின் ரசிகர்கள்தான் தான்அறிந்தவற்றை உணர்ந்தவற்றை பதிகிறான்.பதியும் அளவிற்கு அக் கருப்பொருளில் சாரம் இருப்ப தாக நம்புகிறான் . இதில் ஏன் திரு இளைய ராஜாவை இழுக்கிறீர்கள்.ஏனெனில் ஒரு பிம்பம் பிரசாரத்தால் உருவாக்கி கட்டியமைக்கப் பட்டுள்ளது அதற்க்கு மாறுபட்ட கருத்துக்கள் எழும் போது அது ராஜா விற்கு எதிராக அவரின் அதீத ரசிகர்களுக்கு தோன்றலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மெல்லிசை மன்னரின் ரசிகர்களில் பலர் அவருடனே வாதிக்கும் சந்தர்ப்பம் கொண்டவர்கள் அவர் ம6ற்ற முந்தைய பிந்தைய இசை அமைப்பாளரின் பெருமைகளை (மேடையில் பேசும் பேச்சல்ல ) அது மாமா SVV GR CRS SDB SJ IR சங்கர் (கணேஷ்) வித்யாசாகர் என்று அனைவரின் சிறப்புகளை அதிகம் கூறியுள்ளார்
திரை இசைக் கலைஞர்கள் கூட நடத்தாத திரை இசை திலகம் நூற்றாண்டு விழாவினை கொண்டாடியது மெல்லிசை மன்னர் ரசிகர்கள் தான் அதுவே எங்களுக்கு மெல்லிசை மன்னரின் பாடம் ,அனைவரையும் மதிக்கவேண்டும் ரசிக்கப்படவேண்டும் ,அதுவே அவரது வேண்டுகோள் நாங்கள் அதனை கட்டளையாக ஏற்றுக் கொண்டுளோம் .ஏற்கனவே சொன்னதுபடி பிம்பம் கலைவது உங்களின் வேதனை .என் செய்ய
சக கலைஞரின் பங்களிப்பு பற்றிய உங்களின் கருத்து நகைப்புக்குரியது .நான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைக்குள் போக விரும்ப வில்லை .ஆனால் ஒரு கூட்டு முயற்சியில் மற்றவருடைய கருத்துக்களைக் கேட்பது ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம் தனது திறமையின் மேல் உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு ..உங்கள் எழுத்துப் படியே அவருக்கு சரி என்றால் தான் ஏற்றுக் கொள்வார் அப்போது முடிவு செய்யும் அதிகாரம் அவரிடமே. நல்லவேளை டைட்டிலி ல் உதவியாளர் பெயர் போடுவது மெல்லிசை மன்னருக்கு இசை அவர்களது என்று சொல்லாமல் போனதிற்கு என் நன்றிகள் .அடுத்ததடவை சென்னை வரும் பொழுது மெல்லிசை மன்னருடன் பணி புரிந்தவர்களை சந்தியுங்கள் உண்மை தெரியும் மேடைப் பேச்சுகளையும் மீடியாவில் வருவதையும் வைத்துக்கொண்டு எழுதவேண்டாம் . திரு ஷியாம் சொன்னது அப்போது கம்போசிங் க்கு காசு கொடுக்க மாட்டார்கள் இருந்தாலும் விசு கம்போசிங் என்றால் நாங்கள் ரெகார்டிங் விட்டுவிட்டு அவர் கம்போசிங் சென்று விடுவோம் அந்த அளவு நாம் கற்றுக் கொள்ளலாம் .அதனால் தான் 3 தலைமுறை ரசிகர்கள் மட்டுமல்ல 3 தலைமுறை இசைக்கலைஞர்களையும் தன குழுவில் கொண்டிருந்தார் .
மெல்லிசை மன்னரின் அதி தீவிர ரசிகர்கள் அறிவீலிகள் என்று கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்பதைப் போன்றது .அதற்குமேல் அதற்க்கு மதிப்பு இல்லை .அறிவற்றவர்களாய் உங்கள் கணக்குப் படி இருந்தாலும் இதுவரை உங்களை யாரும் இழித்துப் பேசவில்லை என்ற பண்பாளராய் இருப்பது தெள்ளத்தெளிவு .அதுதான் எங்களின் தெளிவு .ஒன்றுமே தெரியாமல் பேசுபவர் பேச்சு நிலைக்கா
ஏற்கனவே சொன்னது தான் பல ஆயிரக்கணக்கான பாடல்களில் சிலவற்றை தொகுத்து நீங்கள் மெல்லிசை மன்னரின் பாடல்கள் பெற்றது தான் என முயற்சிப்பது கண்கூடு .
எனது பதிவு நீண்டுகொண்டே போவதால் உங்களுடைய பதிவுகளை www.mellisaimannar.in என்ற எங்களின் தளத்தில் பதிவிட்டுளோம் .நீங்கள் கூறிய படங்களின் லிங்க் தகவல்களை அதில் தருக , தளத்தில் விவாதிப்போம் , நன்றி