Site under maintenance. Some links may not be active. To resume shortly
 
கண்ணை விட்டு போனாலும் 
கருத்தை விட்டு போகவில்லை 
என்றும் எங்களுடனே
கருத்தாய் கானமாய்
--- M.M.F.A. FB page at:
இன்று இசை ரசிகர்கள் அனைவரது வாழ்விலும் ஒரு கருப்பு நாள். இதே நாள் மெல்லிசை மன்னர் நம்மை விட்டு மறைந்த தினம். நம்மை விட்டு மறைந்தாலும் மறக்க முடியா நினைவுகளுடன் நம் அனைவரது நெஞ்சங்களிலும் வாழ்கிறார். வாழ்க மன்னரின் புகழ். மென்மேலும் வளர்க அவரது இசை.
--- S.V.RAMANI in his FB page

Year 2015 - this day about an hour ago Madhu Ashok, the daughter of Shri. MSV had called me several times to tell me that the Legend had entered into His eternal glory. The previous night only I had visited Him at the hospital, not wanting to give up my hopes of his recovery, tired I had slept off with my phone in silent mode. When I suddenly woke up to check my phone I saw 5 missed calls from Madhu around 445am. Alas, my hopes were shattered with Madhu informing me of the passing away of my Guru. Sobbing my way through went to Fortis Malar immediately to see the immortal remains of Him.

Look at the Blessings I was bestowed upon with by Him. I happened to be the first pal bearer to carry Him along with the hospital staff. Madhu and I travelled with Him for one last time back to Santhome in that ambulance. Though a brief sojourn, it really shook me off for, memories of innumerable times spent with Him kept me in a very sombre mood.

The day July 14, 2015 dawned as usual for many, but for us - MSVians, this day was an eclipse of a sort. MSV became history and so was melody.....

Remembering my most reverred Guru Shri. Shri. MSV on this 3rd year....by the way, does one need to remember Him this way?? Certainly not. His music has become an integral part of all of us and for those who have been close to Him, His absence shall always be palpable no matter how many years pass by.

My dear most MSV, you are being thought off by all of us today. RIP and keep Blessing us from wherever you are..

Missssssssssssssssssssss you always...

PRANAAMS
VaidyMSV

from msvtimes FB page:
 
 
 

M.M.F.A.

Click the above image to go to M.M.F.A. - Mellisai Mannar Fans' Association page
 
M.M.F.A. அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புவோர், இந்த இணைப்பில் தரப்பட்டுள்ள படிவத்தினை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு அதற்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையையும் செலுத்த வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, கைப்பேசி எண்கள், மற்றும் மின்னஞ்சல் முகவரி யாவும் விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ளன.
 

M.M.F.A. அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

 
திரை இசை என்றால் அவ்வளவாக வரவேற்பும் நல்லெண்ணமும் நிலவியிராத கால கட்டத்தில் அதைப் பற்றிய கருத்துக்கள் மக்கள் மனதில் காரிருளாய் சூழ்ந்திருந்த நேரத்தில் அவ்விருள் போக்க வந்த ஒளியாய் உதித்தவர் மெல்லிசை மாமன்னர். அதே போல தொல்லிசையாகவே ஒலித்து வந்த திரையிசையை மெல்லிசையாய் வடிவமைத்து மக்களின் செவி வழியே அவர்களின் உள்ளத்தில் நுழைந்து நிரந்தரமாய்க் குடியேறியவரும் மெல்லிசை மன்னரே. தமிழ்த்திரையுலக வரலாற்றை எழுதும் போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களைத் தவிர்த்து எழுத முடியாது என்கிற அளவிற்கு வரலாற்றில் பெரும் பங்களித்தவர் மெல்லிசை மன்னர். அவருடைய பங்களிப்பினை விரிவாக அவருடைய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் பட்டியல், நிகழ்வுகள், செய்திகள், அந்நாளைய நிழற்படங்களின் மூலம் நெஞ்சில் நிழலாடும் நினைவலைகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வது இவ்விணைய தளத்தின் தலையாய பணியாயிருக்கும். மெல்லிசை மன்னரின் புகழை இன்றைய இணைய யுகத்தில் நீக்கமறக் காண்கிறோம் என்றால் அதற்கு தலையாய மற்றும் பெரும்பங்காற்றியது, அவரே தன்னுடைய குழந்தையாய் பாவித்த எம்எஸ்விடைம்ஸ் இணையதளமாகும். அந்த எம்எஸ்விடைம்ஸ் கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வரும் பணிக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்து இவ்விணைய தளம் தன்னுடைய பணியைத் தொடர்கிறது. எம்எஸ்விடைம்ஸ் இணையதளம் வகுத்துள்ள பாதையிலேயே இவ்விணைய தளத்தின் பயணமும் இருக்கும்.இவ்விணையதளத்தில்,  தவிர்க்க இயலாத இடங்களைத் தவிர பெரும்பாலும் தகவல்கள் தமிழிலேயே இருக்கும். தொடர்பு மின்னஞ்சல் முகவரியில் தங்களுடைய மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். மேலும் தங்கள் பகுதியில் மெல்லிசை மன்னரின் சிறப்பை நினைவு கூறும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும் நிழற்படங்களையும் அனுப்பினால் அவை இங்கு இடம் பெறும். நன்றி.
 
மெல்லிசை மன்னர் இணைய தளத்தில் வரும் நாட்களில் இணைய இருப்பவை...
 
இசை அலைகள் பகுதியில் மெல்லிசை மன்னர் உருவாக்கிய பாடல்கள், திரைப்படங்களுக்கு அவர் அளித்த முகப்பிசை, பின்னிசை, ஊடிசை, பக்திப்பாடல்கள், தனிப்பாடல்கள், தனி இசைத் தொகுப்புகள் முதலியவற்றிற்கான இணைப்புகள் இடம் பெற உள்ளன.
 
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் இணை பிரியா சகோதரர் திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களின் திரையிசைப் பணிகளைப் பற்றிய தனிப்பகுதி..
 
தமிழ்த்திரையுலகில் இதர இசையமைப்பாளர்கள் பற்றிய அறிமுகம்
 
திரையிசை வரலாறு...
 
மெல்லிசை மன்னருக்கு ரசிகர்கள், இசைக்குழுவினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்களின் புகழஞ்சலி..
 
நினைவலைகள் பகுதி விஸ்தரிப்பு.. ஆவணங்கள் அந்நாளைய நிழற்படங்கள்...
 
இன்னும் பல..