Forum

ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -16  

  RSS

K.Raman
(@k-raman)
Trusted Member
Joined: 11 months ago
Posts: 65
22/05/2019 10:12 am  

அன்பர்களே

                                                          'நெஞ்சில் ஓர் ஆலயம்'

                    இயக்குனர்  ஸ்ரீதர்

                        ஸ்ரீதர் குறித்த பிற தகவல்கள் -நெஞ்சில் ஓர் ஆலயம் தொடர்பாக பின் வருவன :

                     முக்கோண காதல் கதைகளை ஏராளமாக வழங்கியவர் ஸ்ரீதர். ஆனால் இந்தப்படத்தை அவர் ஒரு புது வழிமுறையாக மிடில்-ஏஜ் எனப்படும் 35 வயது அதற்கு மேலும் வயதை ஏற்றிவிட்ட பழைய காதலர்களை ஒரு குழப்பமான சூழலில் உலவ விட்டிருக்கிறார், இந்தச்சூழலே படத்தின் மிகப்பெரிய அஸ்திவாரமாக உருவெடுத்தது என்றே சொல்லலாம்

. அப்படியானால் கதா பாத்திரங்களின்  பிற வலிமைகள் இல்லையா என கேட்கத்தோன்றும்.  நான் இங்கே சுட்டிக்காட்டுவதும் கூட இந்த வயது அடிப்படையினால் மிகுந்த வலுப்பெறுகிறது என்பதே.   மாஜி காதலர்கள் சந்திக்கும் ஓரிரு காட்சிகள் இந்த கருத்தை முன்னிறுத்தும்.

டாக்டர் தனது காதலியை சீதா - என்று பேச துவங்கியவுடன்

சீதாவின் பதில் - "என் கணவர் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறார் "

படித்த பண்பாளனான டாக்டருக்கு இது கூடவா புரியாது? அதன் டாக்டர் , சீதாவுடன் பேச நேரும் போதெல்லாம் -அவர் உரையாடல்கள் பண்பு விலகாதவை மட்டும் அல்ல பிறர் மனைவியுடன் பேசுகிறோம் என்பதறிந்து வார்த்தைகள் உதிர்க்கப்படுவது கல்யாணகுமாரின் டாக்டர் பாத்திரத்திற்கு மெருகேற்றியுள்ளது.

நோயளிக்கணவன் மருத்துவமனையில்  பொழுது போகாமல் இருக்கும் காட்சிகள் வலிந்து உருவாக்கப்பட்டன வாக இல்லாமல் மிகவும் யதார்த்தம் சூழ்ந்தவை.  அதிலும் மூவரும் சந்திக்கும் ஆரம்பக்காட்சிகள் ஒன்றில் நோயாளி டாக்டரை பார்த்து  சார் உங்களுக்கு சொந்த ஊர் கோயம்புத்தூரா  ? என் மனைவியும் கோயம்புத்தூர்  தான் என்னும் இடத்தில் திகைத்து விட்ட டாக்டரும் , நடுநடுங்கும் மனைவி நிலையில் டாக்டரின் காதலி இம்மூவரின் முகபாவங்களும் மறக்கமுடியாதன. இது போன்ற காட்சிகளில் நீண்ட வசனம் பேசும் மரபை தகர்த்துவிட்டு  சில வினாடிகளில் அடுத்த காட்சிக்கு பயணிப்பது அன்றைய புதுமை.

கணவன்,  மனைவியை டாக்டரை மணந்துகொண்டு  பாதுகாப்பான வாழ்வை அமைத்துக்கொள்ள வற்புறுத்தும் நிலையில், தேவிகா நடிப்பில்  ஒரு பெரும் பரிமாணம் வெளிப்பட்டது. தவிர  எங்கே நம் காதலன் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதமாக்கி கணவனை காப்பாற்றாமல் விட்டு விடுவானோ என்ற கவலையில்   தேவிகா -- " இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தினால் அடுத்த நிமிடம் நான் இறந்துவிடுவேன்  என்று அஸ்திரம் வீசியவுடன்

புழுவாய் துடிக்கும் டாக்டர் --" இவ்வளவு பழகியும் என்னை கீழ்த்தரமானவனாக நினைத்தவிட்டாயா  எனும் இடத்தில் கதா பாத்திரங்கள்  பண்பாளர்களாக  தங்களை நிலைப்படுத்திக்கொண்டதும்  அன்றைய தமிழ் திரையில் பெரிதும் அறியாதன. அதே போல இவ்விருவரின் நிலைகளை உணர்ந்தாலும் ஒன்றுமே அறியாத நோயாளியாக அதே நேரத்தில் காதல் என்ற விளையாட்டு  பலரை ஊனப்படுத்தும் நிகழ்வு என அவன் வாதிடுவது மிகவும் இயற்கையாக வடிவமைக்கப்பட்\டதனால் , சினிமாத்தனம் இல்லாமல் காட்சி கம்பீரமாக  அமைந்தது.

இன்னும் பல பேச உள்ள களம்.

வளரும் அன்புடன் ராமன்


Quote
Share:

Please Login or Register