Forum

ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 15  

  RSS

K.Raman
(@k-raman)
Trusted Member
Joined: 11 months ago
Posts: 65
18/05/2019 7:38 pm  

அன்பர்களே                          

                                                      “ நெஞ்சில்  ஓர் ஆலயம்”

 

நெஞ்சில்  ஓர் ஆலயம் படத்தின் பல அம்சங்களை இப்பதிவில் பேசுவோம்.

நடிகை நடிகையர் தேர்வு

தேவிகா அவர்கள் தமிழ்த்திரைக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர். ஆனால் 'முதலாளி ' க்கு பின் கதாநாயகி ஆக சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து இப்படத்தில் மிக வலிமையான பாத்திரத்தில் தோன்றினார். இதற்கு முன்னர் இது போன்ற கனத்த சோகப்பாத்திரத்தில் அவர் வந்ததாக தெரியவில்லை.அந்த நிலையில் ஸ்ரீதர் எடுத்த முடிவே ஒரு முயற்சியாளனுக்கு இருக்க வேண்டிய துணிச்சலை அப்பட்டமாக காட்டுகிறது.

சரி, கல்யாண குமார்  கன்னட திரையில் நன்கு அறியப்பட்டவர். தமிழ் திரையில் முதல் படம். அவருக்கு ஓர் நளினமான பாத்திரம்; அதாவது காதலியின் கணவனை காப்பாற்றி மீட்டு எடுக்கவேண்டிய ஒரு உன்னத டாக்டர் பாத்திரம்.

அடுத்து நோயாளி கதையின் மையப்புள்ளி முத்துராமன். இவரும் திரையில் அக்கால கட்டத்தில் பெரிதும் அறியப்படாதவர். அவரையும் ஒரு சிறப்பான நல்லெண்ணம் கொண்ட கணவன் வேடத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தார் ஸ்ரீதர்.

நாகேஷ் அவர்களின் திரை அந்தஸ்தும் கிட்டத்தட்ட  புதுமுகம் தான்.  வி எஸ் ராகவன் தெரிந்த முகம் அனால் ஒரு துணை பாத்திரமாக.

குட்டி பத்மினி அடம் பிடித்து  இடம் பிடித்தார் என்பது அன்றைய செயதி.  இவை ஒரு இயக்குனரின் துணிச்சலை காட்டும் அதே வேளையில் இயல்பாக கிடைக்கும் ஒரு கட்டுப்பாடு புதுமுகங்களிடம் நன்கு செல்லுபடியாகும் ;

மேலும் குறுகிய கால பட்ஜெட்  படங்களில் இவர்களை தினமும் நீண்ட நேரம் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்பது ஒரு காரணமாக இருந்திருக்கும். ஆனால் படத்தின் வெளியீடு குறித்த தேவைகளுக்கு புதுமுக பட்டியல் ஒரு இடையூறாக போய் விடும் அபாயமும் உண்டு..

இது போன்ற நிலைகளில் இயக்குனரின் பெயர் தான் மிகப்பெரிய முதலீடு என்பது இங்கே கவனிக்கப்பட  வேண்டியதாகிறது. மூன்று பாத்திரங்களுக்கும் வசனம்  மிக குறைவு. எனவே பாவங்களை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அதிகம் . அதிலும் டாக்டரும் அவரின் மாஜி காதலியாகிய தேவிகா வும் சந்திக்கும் இடங்கள் மிகுந்த நுணுக்கமாக உணர்ச்சி மற்றும் பரிதாப நிலைகளை வெளியிடும் பாங்கு அற்புதமாக காட்சிப்படுத்த பட்டிருப்பது முற்றிலும் அன்றைய புதுமை. சினிமா த்தன இலக்கணங்கள் இல்லாத காரணமே இப்படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது

இவ்விலக்கணங்கள் தகர்க்கப்பட்டது சுமார் 67 ஆண்டுகளுக்கு முன்னர். அதே போல தொண்டை வறண்டு போகும் வசனங்களை விட மண்டையில் சிந்தனை ஊற்றெடுக்க வைக்கும் காட்சிகளுக்கே எதிர்காலம் என்று சொல்லாமல் சொன்ன ஒரு பெரும் முயற்சி. நமது நண்பர் VK  சொல்லுவார் -"இந்த படத்திலும் சில இலக்கணமான வசனங்கள் உண்டே என்று" நான் புரிந்து கொண்டது யாதெனில் பழமையில் இருந்து புதுமைக்குள் நுழைந்து கொண்டிருந்த இடைக்காலம் என்பதனால் . இலக்கணத்தை வேருடன் அகற்றி இருக்க முடியாது என்பதே .  சோதனை நிலையில் பழையன புதியன கலவையாக இருப்பது ஒரு தற்காப்பு உத்தி என்றே நினைக்கிறேன்

மேலும் வளரும்

அன்புடன்    நன்றி   ராமன்


Quote
Share:

Please Login or Register