Forum

INTERACTION WITH MADURAI SRI .G.S.MANI 21/4/2019  

  RSS

MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 11 months ago
Posts: 38
24/04/2019 7:25 am  

Dear Friends 

The function went off well .Professor Raman Welcomed the gathering,and Ganesh Vaitheeswaran Compered the show very well .

The invite for the show was very well designed by SV Ramani and the memento was designed by V.Raghavender 

MMFA thanks each and every one who contributed to the success of this function .

we are giving below the write up received by two of the members , others can of course add 

Thank you

Bala srikumar 

It was a pleasant drive down memory lane on Sunday the 21 April at Russian Cultural Centre for fans across age groups of the legendary music director M.S. Viswanathan, steered by the eminent Carnatic music exponent, Madurai Shri GS Mani who rubbed shoulders with MSV for well over a decade as his commander, the event being staged by Mellisai Mannar Fans Association (MMFA), a non profit organization in memory of the genius.

After invoking Mother Tamil’s blessings, the event kicked off with the interesting narration by a senior fan of MSV, Shri RVS Mani of Madurai,  of a neighbourhood hand-written magazine in circulation as early as in 1950's, with contributions from like-minded music fans. Though discreet in this activity, considering the parental regimentation of those years, this young group nurtured speculation of a new genre  in creation, taking a course completely different to Carnatic Music.

 

Shri MS Shekar, one of the founding members of MMFA outlined the intentions behind forming this fans association – main ones being, record and archive from those who worked with the legend about his compositions and their values, not just to showcase them , but also for future generation musicians to appreciate and emulate.

 

The stage was then taken over by lyricist Kamakotiyan, again from Madurai, narrating a similar fan club for Viswanathan – Ramamurthy – the first of its kind for any music director, started by him and his group of friends, again in  late 1950s – not knowing that he would be knocking the legend’s door three decades later to display his poetic prowess. With sheer persistence, he won over MSV and went on to pen many songs in Tamil movies, tuned by Mellisai Mannar. Shri Kamakotiyan also expressed his gratitude to MSV for exalting his stature in the tinsel world.

Details of the existing website msvtimes.com started in 2006 were briefly highlighted and the intent to build a new one, www.mellisaimannar.in was also revealed, where all music lovers can contribute their bit and celebrate MSV

While the stage got lit for the Chief Guest of the day, Madurai Shri GS Mani, old timers sunk into nostalgia watching  the opening song of the 1959 blockbuster Baaga Pirvinai, played on the screen (starring the one and only Nadigar Thilagam), sung by TMS and GS Mani himself.

The next two hours were sheer pleasure to the ears, as Shri GS Mani recounted his experiences as an assistant to the Little Master, narrating the nuances of various songs, detailing the background behind their lyrics and the way they got transformed to final songs, while singing these with as much ease as a lad in his twenties.

He started off by explaining why film songs need not strictly adhere to the grammar of a genre like Carnatic music, for emotions expected to be expressed need to be factored. And wondered if MSV was already a cause celebre’  as early as in the 1950s .

While lavishing praises on G Ramanathan and KV Mahadevan for their composing skills on the harmonium, GS Mani pointed out the unique fingering style of MSV on that instrument. Time and again his eyes were moist as he repeated that MSV was a natural composer, with music flowing out from within, obviating the need for any theoretical expertise in Carnatic Music.  In all humility, he admitted that his hard earned knowledge of music was no match for the music that flowed from MSV’s heart and harmonium. He was baffled as every song got composed almost magically, and had to be prompted by MSV to complete the notes rather than admire him!

He did not fail to mention the various genres like western, jazz and Hindustani being effectively brought out in many a song suiting the needs of the movie. And explained how MSV’s range could spread from classic to romance to emotional numbers.

It was indeed a delight that he picked up several songs to highlight the Carnatic and other intricacies and kept the audience spell bound with the depth of his knowledge. He did feel that the current generation music directors can attempt to take a leaf or two from MSV’s ocean of songs

GS Mani also went on to describe the other personal and professional traits of Mellisai Mannar – punctuality, adherence to time schedules, leadership skills, hospitality at home etc.

GS Mani considered himself lucky to be closely associated with the one and only Kaviarasar Kannadasan and how he used to be amused at the speed in which Kavignar , given a song situation, was able to just read out lyrics, as if they were written on a wall across. He was indeed right when he attributed it to nature’s design that such creators like Kannadasan and MSV are destined to descend on earth as a pack and complete their tasks for mankind.

It was interesting to know that GS Mani had enough association with TMS, legendary TR Mahalingam, AL Raghavan etc even before joining the MSV team, as they were closer to his native place. In his earlier days, he shared his room with the distinguished lyricist Pattukottai Kalyanasundaram.

Though after a decade of association with MSV, he had to part ways on a pleasant note to pursue his Carnatic music dream, he promised MSV that he would be available to help him at a call – and religiously maintained this promise for the next 10 years , on a part time basis. He could recall with pride, all the laurels he got for rendering Carnatic music in a way peculiar but correct to the ears of conventional musicians and attributed it to his learning from MSV.

When he left the stage, after taking some questions from the fans of MSV,  the audience could be seen longing for more.

Notable among the guests of the day were recording engineer and pioneer in innovation of yesteryears,  the octogenarian who recorded a chunk of MSV songs, Shri Sampath, lyricist  Shri Muthulingam, Shri Gangai Amaran and actor Shri Rajesh, all celebrity fans of Mellisai Mannar.

More such events are on the anvil, to archive the experiences and interactions of doyens of the golden era with Mellisai Mannar , which will get duly notified in www.mellisaimannar.in

Keep watching the space !

Visit MMFA’s youtube channel to access more about MSV

Raghavender's Tamil version 

இசை விற்பன்னர் திரு ஜி.எஸ். மணி அவர்களுடன் கலந்துரையாடல்

மெல்லிசை மன்னர் ரசிகர்கள் அமைப்பு (Mellisai Mannar Fans’ Association), சமீபத்தில் பிரபல கர்நாடக இசைக் கலைஞரும் திரை இசை விற்பன்னருமான திரு ஜி.எஸ்.மணி அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தது. திரு ஜி.எஸ்.மணி அவர்கள் 50களின் இறுதியிலிருந்து 60களின் முற்பகுதி வரை மெல்லிசை மன்னருடன் இசையமைப்பில் உதவியாளராக இருந்தவர். திரை இசையில் கர்நாடக ராகங்கள் என்ற தலைப்பில் ஏராளமான விளக்கவுரை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். மெல்லிசை மன்னருடன் அவர் பணிபுரிந்த காலத்திய அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மூத்த ரசிகர் திரு ஆர்.வி.எஸ்.மணி அவர்கள் உரையாற்றினார். 1950களில் நிலவி வந்த கண்டிப்பான குடும்ப சூழல், கர்நாடக இசையை மட்டுமே கேட்க அனுமதித்த அந்தகாலத்தில் தான் எப்படி சினிமா பாடல்களைக் கேட்க முடிந்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். அது மட்டுமின்றி மிகவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் மெல்லிசை மன்னரின் இசையைப் பற்றி தாம் கையெழுத்துப் பிரதி நூல் ஒன்றில் எழுதியதையும் குறிப்பிட்டார். அதுவரை இருந்து வந்த இசையின் வடிவத்திலிருந்து எம்எஸ்வியின் இசை வேறுபட்டு ஏராளமான ரசிகர்களையும் அவருக்கு உருவாக்கித் தந்ததையும் அவர் கூறினார்.

அவரைத் தொடர்ந்து திரு காமகோடியன் அவர்கள் தமக்கும் மெல்லிசை மன்னருக்குமான நெருங்கிய நட்புறவை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தாம் அவருக்கு 60களின் துவக்கத்தில் ரசிகர் மன்றம் அமைத்ததைப் பெருமையுடன் கூறினார். அந்தக் காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் போன்ற பிரபலமான நடிகர்களுக்கே ரசிகர் மன்றங்கள் இருந்த காலத்தில் இசையமைப்பாளருக்கு ரசிகர் மன்றம் அமைத்த பெருமை எம்எஸ்வி ரசிகர்களுக்கே சாரும் என பெருமையுடன் அவர் கூறியபோது அரங்கில் இருந்த அனைவருமே மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தாம் அவருடன் பணியாற்றுவோம் என்பதை நினைத்துக்கூட பார்த்ததில்லை எனக்கூறிய காமகோடியன் அவர்கள், மெல்லிசை மன்னருடன் தமக்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் எனக் கூறினார்.

தொடர்ந்து விழா நாயகன் திரு ஜி.எஸ். மணி அவர்கள் வந்தபோது அவருக்கு பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு தரப்பட்டது. அதைக் குறிப்பிடும் வகையில் ஒரு காணொளி ஒளிபரப்பபட்டது. பாகப்பிரிவினை படத்தில் தேரோடும் பாடலை திரு மணி அவர்கள் டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதையொட்டி பாகப்பிரிவினை டைட்டிலும் தேரோடும் பாடல் காட்சியும் திரையிடப்பட்டன. உடல் ஊனமுற்ற நிலையிலும் அந்த நாயகன் ஆடிப்பாடும் காட்சியில் நடிகர் திலகத்தின் மிகச்சிறப்பான நடனமும் நடிப்பும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.

தான் எப்போதும் மன்னரின் உதவியாளன் என்று அழைக்கப்படுவதில் தான் பெருமையடைகிறேன் எனக்கூறி தன் உரையைத் துவக்கினார் திரு மணி அவர்கள். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு அவர் தன் நினைவலைகளை ஓட விட்ட போது பார்வையாளர்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர். 85 வயது இளைஞருக்கு இருக்கும் நினைவாற்றல் இன்றைய தலைமுறையினருக்கு இருக்குமா என்பது ஐயமே. தான் அவருடன் பணியாற்றிய காலங்களில் சந்தித்த அனுபவங்களை அவர் கூறியபோது பார்வையாளர்களுக்கு ஏராளமான புதிய விஷயங்களும் கிடைத்தன. குறிப்பாக நான் பேச நினைப்பதெல்லாம் பாடல், மேயர் என்ற படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதியது என அவர் கூறிய செய்தி புதியதாகும். ஒரு ஊமைத்தாய் தன் குழந்தையை தாலாட்டி பாட எண்ணுவதாக அமைக்கப்பட்ட சூழல். அவளுக்கு பேச்சாற்றல் இல்லாததால் அவள் சார்பாக அவளுடைய சகோதரி பாடுவதாக காட்சியமைப்பு. அந்தக் குழந்தையைப் பார்த்து தாயின் சகோதரி பாடும் பாடலே நான் பேச நினைப்பதெல்லாம் என அவர் கூறியபோது பார்வையாளர்களுக்கு பிரமிப்பும் ஏற்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை இவரால் எப்படி இன்னும் நினைவில் கொள்ள முடிகிறது என்று வியந்த போது, அந்த வியப்பை திரு மணி அவர்களே தனக்கும் உள்ளதாக கூறியது அவருடைய நேர்மையை எடுத்தியம்பியது. தன்னுடைய. உரையில், அவர் மன்னரின் சமகாலத்திய இசையமைப்பாளர்கள் அனைவரையும் பாராட்டி நினைவு கூர்ந்தார். திரு ஜி.ராமநாதன், திரு கே.வி.மகாதேவன் என அனைவருமே தமிழ் சினிமாவில் அளப்பரிய பங்காற்றியுள்ளார்கள் எனப் பாராட்டினார்.

மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் பணியாற்றியவர்களையும் அவர் பாராட்டத் தவறவில்லை. அதே போல் பாடலாசிரியர்கள் என யார் வந்தாலும் மன்னர் யாரையும் திருப்பி அனுப்பமாட்டார் என்றும் கூறினார். நிலவே என்னிடம் நெருங்காதே பாடலுக்கு ட்யூன் போட்டபோது, திரு பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் தேர்ந்தெடுத்த மெட்டையே படத்திற்கு பயன்படுத்தியதையும் திரு மணி அவர்கள் தெரிவித்தார்.

தன் நினைவுகளை மணி அவர்கள் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் வினாக்களுக்கும் விடையளித்தபோது, அந்த வாய்ப்பு தன் நினைவூகளில் இன்னும் ஆழமாக ஊடுருவ உதவுவதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து நன்றியும் கூறியது அவருடைய மேன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திரு மணி அவர்கள் பேசி முடித்தபோது அனைவருமே மிகவும் ஏக்கமாக இருந்தனர். இன்னும் தொடர்கூடாதா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் திரு கங்கை அமரன் வந்திருந்தார். மேலும் திரு ராஜேஷ் அவர்களும் மற்றும் மெல்லிசை மன்னர் குடும்பத்தினரும் வந்திருந்து நிகழ்ச்சியை முழுமையாக அனுபவித்தனர்.

விழாவின் மற்றோர் குறிப்பிடத்தக்க அம்சமாக, மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கு, www.mellisaimannar.in என்ற இணயதளத்தை அர்ப்பணித்தது M.M.F.A. மேலும் இதற்கெல்லாம் முன்னோடியாய்  விளங்கும் எம்எஸ்விடைம்ஸ் இணைய.தளத்தின் சிறப்பும் விழாவில் அதன் சார்பாக திரு சம்பத் அவர்களால் கூறப்பட்டது. வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள் நிகழ்ச்சி இன்றளவும் மன்னரின் சிறப்பைக் கூறிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றும் அதை நடத்தியதற்காக எம்எஸ்விடைம்ஸ் மிகவும் பெருமை கொள்கிறது எனவும் அவர் கூறினார்.

மேலும் எம்எஸ்விடைம்ஸ் சார்பாக திரு சபேசன் அவர்களும், மெல்லிசை மன்னர் இணையதளத்தை இந்த அமைப்புக்கு வழங்கிய திரு ராகவேந்திரன் அவர்களும் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

மெல்லிசை மன்னரின் புகழுக்கு அணி சேர்க்கும் இந்நிகழ்ச்சி, M.M.F.A. வின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரம் என்றால் அது மிகையாகாது.


ReplyQuote
K.Raman
(@k-raman)
Trusted Member
Joined: 7 months ago
Posts: 61
24/04/2019 9:51 am  

Dear Friends, 

The reporting on Shri GS Mani's programme for MMFA  is nearly complete. Other than the energy level sustained by Mr.GSM [standing all through with just a sip of water on occasions] was silent testimony to his fitting association with Shri MSV -another embodiment of energy. Of the many interesting spots from his narration, the following few keep haunting me

1 How MSV blended the voice of TR Mahalingam [of a range level 4] to that of AP Komala [of range level 8] with either of them unable to ascend or descend scales to match the decibel of the singing partner. MSV planned a strategy of 2 different scales from where the singers could deliver TRM : NAN ANDRI YAAR VARUVAR---   

AP K : YEN ILLAI AND FURTHER ON THE SAME SCALES with no hiccups to listening pleasure. A true master -this MSV has always right since his twenties. 

2 GSM  made a plain admission of his own thoroughness with all the "raga' nuances of the carnatic system where in he has total grip and mastery. He unconditionally admitted that all prowess in carnatic music is OF NO AVAIL IN COMPOSING A FILM SONG FOR A SPECIFIED EMOTIONAL FRAME OF MIND and that MSV can never even be 'neared' in this game.

3 MSV -on a receiving the lyric would read the words and repeat the words himself to precisely fix it to a pattern in which words are spoken in daily life. This way MSV used to fix the emotional ambit to which the lyrical word would generously fit in. This was his personal assessment of word-emotion bondage -said Shri.GSM

4 Recalling the song "UNNAI ONDRU KETPAEN" of 'Pudhiya paravai' FOR ITS COMPOSITIONAL ELEGANCE, Shri.GSM  flung a question to the Cine- music fraternity in the auditorium - "can any one execute such an orchestration today ?" The silence was eloquent of the impossibility.     These, in my perception portrayed the complex wizardry of MSV as a composer unparalleled. 

Regards                                      K.RAMAN          MADURAI. 


ReplyQuote
P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 7 months ago
Posts: 36
24/04/2019 3:51 pm  

After recording Isai Chakravarthy G.Ramanathan, on hearing the song “NAAN ANDRI YAAR VARUVAAR” had admired our Mellisai Mannar and said “Mahalingaththoda thalai ezhuththaiye maathiteengaleppaa”


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
25/04/2019 9:48 am  

அன்பு நண்பர்களே  

நான் அன்றி யார் வருவார் பாடல் பதிவு செய்யும் போது கேட்டு GR TRM க்கு இந்த பாடல் ஒத்து வராது. இது ஒரு பெரிய பரிட்சை என்றாராம். மெல்லிசை மன்னர் மற்றும் TRM அந்த பரிட்சையில் பாஸ் ஆகி பாராட்டு பெ‌ற்றது தனிக் கதை  

best Regards
vk


ReplyQuote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 6 months ago
Posts: 41
27/04/2019 11:50 am  

அன்றைய மாலை அழகானது.

நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை என்னும் வரிக்கு ஏற்ப பெரியவர் திரு ஜீ.எஸ்.மணி

அந்த பொழுதை ஸ்வாரஸ்யம் குன்றாமல் கொண்டு போனார்..

அவ்வப்போது பாடியும் பிரமிக்க வைத்தார்.

மகனே கேள் பாடல் இன்றும் நினைவில் வைத்து பாடியபோது அரங்கம் அதிர்ந்தது.

பட்டுக்கோட்டை,சிவாஜி, டீ எம் எஸ் இவர்கள் குரலில் பேசியபோது அவர்களை நேரில் கண்ட அனுபவம்.

மன்னர் வாசிப்பில் மயங்கும் போது,, ரசிக்காதே ஸ்வரம் எழுது என்னும் அவரது கடமையுணர்ச்சி குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு ஸ்ருதியில் அமையும் வாத்தியங்களை ஒருங்கினைத்து ஒத்தாற்போல் இசைக்க வைக்கும் சிரமம்

ரசிகனுக்கு புரியாது.

சிறப்பான வாசகம்-- மன்னரின் இசையில் அவரது இசை மட்டும் மேலே போவதில்லை,,கவிஞரின் வரிகள் பாடக பாடகியரின் சிறப்பும் வெளிப்படும் என்பது ..

வெற்றி தனக்கு மட்டுமே என்னும் எண்ணம் இல்லாத அசல் கலைஞர் அல்லவா அவர்?எத்தனை பேருக்கு இந்த மனோபாவம் வரும்.

தன் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளவரால்தான் அது சாத்தியம்..

பெரியவர் திரு மணியின் நாகரீகம் பற்றி சொல்ல வேண்டும்.

வந்திருந்த இளைஞர் ஒருவர் அரிந்து கொள்ள வேண்டிய ஆர்வத்தில் விஸ்வனாதன் ராமமூர்த்தி பற்றி கேட்ட போது

அருமையாய் அதைக் கையாண்டு யாரையும் காட்டிக் கொடுக்காதவாறு பதில் அளித்தது அந்த தலைமுறைக்கு மட்டுமே வரும்..

கண்னதாசன் சொல்வார்--இன்னும் கொஞ்சம் பேசமாட்டானா என சபையினர் ஆவலில் இருக்கும் போதே சட்டென்று விடை பெறவெண்டும் ..

அன்று அப்படித்தான் ஆனது..

வாய்ப்புக்கு நன்றி..


ReplyQuote
BLR_Jayakumar
(@blr_jayakumar)
New Member
Joined: 6 months ago
Posts: 2
28/04/2019 8:57 pm  

Fantastic write-up!  I attended this event travelling from Bangalore for the first time.  It was a great event well organized. I could also observe many of the audiences are themselves great experts - (some of them from family of great stalwarts of film industry like Kothamangalam Subbu etc..) .  First time I truly felt meaning of "Sath Sangh"!

This post was modified 6 months ago by BLR_Jayakumar

ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
30/04/2019 7:39 am  

True Jay 

First of all my sincere thanks for having attended the program and It looks like  MMFA can start a chapter in Bangalore as there seems to be a lot of MSV fanatics there. 

Thank you for your compliments and yes the attendees can participate in any forum. They are well versed with MSV. You had Members from Mellisai mannar family too for the function. It's good you liked the program and there would be many such in pipe line hope you can attend as and when time permits. Once again our sincere thanks. 

best Regards
vk


ReplyQuote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 6 months ago
Posts: 41
09/05/2019 5:32 am  

இதுவும் திரு ஜீ எஸ் மணி அவர்கள்தான் சாஸ்திரி ஹாலில்..05.05.2019..

ஐம்பது அறுபது அன்பர்களுக்கு மேல் வருகை..

இம்முறை முதலில் அவர் மெல்லிசை மன்னருடன் பணியாற்றிய அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

பாசமலரில் வைதீகர்களுடைய ஸ்ருதிக்கு,ஈஸ்வரியக்கா குரலுக்கு,கோரஸ் குரல்களுக்கு ஏற்றார்போல மெட்டைச் சரிபண்ணிய மன்னரின் வித்தகத்தை ச்சொல்லும்போதுதான் அந்தப் பாடலின் சிரமம் புரிந்தது..

ஆஃப்ரிகன் பேண்டை வைத்து பதிவாக்கிய புதிய பறவை பாடல்கள்.

தேடல் அவரிடம் இருந்ததால்தான் முயற்சியும் செய்ய முடிந்தது..

இவ்வாறு ஆரம்பித்த நிகழ்ச்சி மெல்ல மெல்ல நகர்ந்து பாட்டுக் கச்சேரியாகியது.

விபரங்களை எதிர்பார்த்து வந்த என் போன்றோருக்கு சற்றே ஏமாற்றம் அரும்பத் துவங்கியதை அறிய முடிந்தது..

ஆரம்பத்திலேயே அவர் சொல்லி விட்டார் நான் மெல்லிசைபாட வரவில்லை என்று..

இருப்பினும் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் உள்ள சம்பவம் வரலாறன்றோ.

 நிகழ்ச்சி அமைப்பளர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி சொல்ல வேண்டியது முக்கியம்.

நன்றி...

 


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
12/05/2019 11:26 am  

dear friends 

Here are videos of the program .

https://youtu.be/U7esV4AWgu4
மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பின் சார்பில் கர்னாடிக் சங்கீத பிரபல வித்தகரும் ,மெல்லிசை மன்னரின் உதவியாளன் என்று சொல்லிக் கொள்பதில் பெரு உவகை கொள்பவருமான மதுரை திரு GS .மணி அவர்களின் கலந்துரையாடல் 21/04/2019 அன்று ரஷியன் கலாச்சார மையத்தில் நடந்தது 
திரு மணி கிடடததட்ட 2 1/2 மணி நின்று தனது அபார நினைவாற்றல் மூலம் பொற்காலத்தை நினைவு கூறினார் 
மெல்லிசை மன்னர் , இசை மேதைகள் திரு ஜி ராமநாதன் திரு kv மஹாதேவன் மற்றும் திருவாளர்கள் கவியரசு கண்ணதாசன் பட்டுக்கோட்டை யார் TMS திருமதி P சுசீலா .,P லீலா ஆகியோரின் திறமைகளையும் எடுத்துரைத்தார் 
நிகழ்ச்சிக்கு திரு முத்துலிங்கம் கங்கை அமரன், திரு சம்பத் மற்றும் திரு ராஜேஷ் அவர்கள் வந்து சிறப்பித்தனர் 
ரெகார்டிங் என்ஜினீயர் திரு ஏவிஎம் சம்பத் அவர்களின் சிறந்த பணியினையும் நினைவு கூறினார் திட்டு மணி அவர்கள் 
இதன் அடுத்த பகுதி விரைவில்

 

best Regards
vk


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
12/05/2019 11:33 am  

நமது பிரபல உறுப்பினர் பேராசிரியர் ராமன் அனைவரையும் வரவேற்றார் . இந்தப் பணி அவர் நிகழ்ச்சிக்கு வந்த பொழுது தான் தரப்பட்டது . அவகாசம் வெறும் 5 நிமிடங்கள் தான் .இருப்பினும் பேராசிரியர் அல்லவா கொடுத்த பணியியினை குறைந்த காலத்தில் அழகுற செய்யும் வித்தகம் அவர் விரல் நுனியில்
அதன் எடுத்துக்காட்டு இந்த காணொளி

https://youtu.be/MA2gCSB_cUU   

 

best Regards
vk


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
12/05/2019 11:43 am  

மூத்த msvian னும் , You Tube யில் மெல்லிசை மன்னர் ரசிகர்களில் மிகப் பிரபலமானவரும் ஆன திரு RVS மணி அவர்களின் அந்தக் கால மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் எப்படி ரசித்தார்கள் என்பதினை தன பாணியில் சுருக்கமாகவும் அதே சொல்லவேண்டியதை அழுத்தமாகவும் பதிவு செய்தார்
you tube -இல் பதிவு செய்தவுடன் ரசிகர்கள் சிவகங்கையிலிருந்தும் பெங்களூரில் இருந்தும் தொலை பேசி மூலம் தங்களது பாராட்டுதலை தெரிவித்தது திரு மணியின் நெஞ்சைத்தோடும் பேச்சின் பலன்

அதன் காணொளி இதோ

https://youtu.be/nszMwMWf4m0
அது சரி . இந்த நிகழ்ச்சியில் மதுரை வாடை அதிகம் போல -திருவாளர்கள் மதுரை GS மணி ,காமகோடியன் ,Prof ராமன் ,RVS மணி ஆகியோர்
கூடிய விரைவில் MMFA அங்கு ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும் போல

This post was modified 5 months ago by M.R.Vijayakrishnan

best Regards
vk


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
12/05/2019 12:25 pm  

இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பம்சம் ,மெல்லிசை மன்னரின் ரசிகர் குழுக்களை அறிமுகப்படுத்துதல்
மெல்லிசை மன்னரின் ரசிகர்களின் பரிணாம வளர்ச்சியினை சொல்லும் முகமாக
திரு RVS மணி - 50 ஆம் வருட மத்திமத்தில் அவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து நடத்திய கையெழுத்து பத்திரிக்கையை பற்றி கோடிட்டு காட்டினார் .அதன் முழு சாராம்சம் நமது தளத்திற்க்காக எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்
50 களின் இறுதியில் ஏற்பட்ட விஸ்வநாதன் ராமமூர்த்தி பிலிம் LOVERS கிளப் பற்றி கவிஞர் காமகோடியன் மற்றுமில்லாமல் பிரதம பேட்சாளர் திரு GS மணியும் கூறினார்கள் .முக்கியமாக திரு மணி தனது ஆல்பத்தில் இருந்து அந்த மன்றம் நடத்திய ஒரு புகைப் படத்தையும் கொடுத்தார் .அது விரைவில் நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
அது போலவே MSV TIMES .COM 2006 Dec 6 அன்று மெல்லிசை மன்னர்கள் முன்னிலையில் திரு சோ ராமஸ்வாமி அவர்களால் துவக்கப்பட்டு அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த இசை நிகழ்ச்சிகளை தாது வருகின்றது .மெல்லிசை மன்னர் ரசிகர்கள் இணைய தளத்தில் எழுதிய பதிவுகளை புத்தகமாக கொண்டுவந்தது ,மெல்லிசை மன்னர் பங்கேற்ற வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள் என்ற MSV unplugged மற்றும் 1970 ஆண்டு வெளிவந்த ஒலிப் பேழை யான THRILLING THEMATIC TUNES என்ற இசை கோர்வையை குறுந் தகடாக கொண்டுவந்த பெருமையும் அவர்களையே சாரும் .இன்னும் சொல்ல போனால் இங்குள்ளவர்கள் பலர் MSV TIMES மூலமாக ஒருங்கிணைத்தவர்களே . அந்த MSV TIMES பற்றி திரு சம்பத் பேசிய காணொளி ,
MSV TIMES உருவாக காரணமாக இருந்த அதில் வந்த சிறந்த கட்டுரைகளின் எழுத்தாளர் அதுவும் அவரது பியனோ வும் MSV யம் கட்டுரை மிகவும் பிரசித்தி .அவர் நமது இணைய தளத்திற்க்காகவும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் எழுது வதாக சொல்லியுள்ளார் .அந்த நேரம் அவருக்கு கிடைக்க ஆண்டவனை வேண்டி MSVTIMES MMFA பற்றிய காணொளி இதோ .திரு சேகர் அவர்கள் MMFA மேற்கொள்ளவிருக்கும் பணிகளை பற்றி சுருக்கமாக கூறினார் https://youtu.be/FSqkqHez-0U
இவ்வமையம் MSV TIMES பிரதம உறுப்பினரும் இந்த இணைய தளத்தை நமக்கு தந்தவரும் மற்றும் இந்த தளத்தின் நெறியாளருமான திரு ராகவேந்திரர் பற்றி தனிப் பதிவு காண்க

best Regards
vk


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
12/05/2019 12:39 pm  

நிகழ்ச்சியின் மற்றொறு சிறப்பு கவிஞர் காமகோடியன் அவர்களுடைய உரை
அவர் மூலம்தான் 50 களிலேயே மெல்லிசை மன்னர்களுக்கு மதுரையில் ஒரு ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டது என அறிந்தோம்.எனவே அந்த மன்றத்தில் தொடர்புடையவர்கள் யாராவது இருக்கிறார்களா என அறிய முற்பட்டோம் .ஆகவே கவிஞர் அவர்களை தொடர்பு கொண்டோம். எந்தவித தயக்கமும் இன்றி முதல் தடவையே பேசினார் . அவர் மெல்லிசை மன்னரின் பால் கொண்ட அளப்பரியது . ஆகவே அதையும் சிறிது கோடிட்டுக் காட்டசொன்னோம் .அருமையான உரை நிகழ்த்தினார் .
அவரின் தனித்த கலந்துரையாடலை MMFA பெருமையுடன் வழங்கும் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொண்டு அவர் உரையின் காணொளியை பதிவு செய்கிறோம் https://youtu.be/YKcdE6GJDvU

best Regards
vk


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
14/05/2019 11:07 pm  

மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பின் சார்பில் சென்னை ரஷியன் கலாச்சார மையத்தில் 21/04/2019 அன்று நடைபெற்ற மதுரை திரு G S மணி , அவர்களின் கலந்துரையாடல் பகுதி -2 ,

மெல்லிசை மன்னரை வானளாவ புகழ்ந்த திரு மணி , மற்ற விற்பன்னர் களையும் போற்றினார்
மெல்லிசை மன்னரும் கவியரசரும் அவதாரங்கள் என்று கூறி அவர்களுடன் தான் கழித்த நேரத்தைப் பற்றி உவகையுடன் எடுத்துரைத்தார்
இதோ அவரது உரை - பகுதி 2.

https://youtu.be/sixJLiIDdz4

This post was modified 5 months ago by M.R.Vijayakrishnan

best Regards
vk


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
19/05/2019 8:21 am  

MMFA (மெல்லிசை மன்னர் ரசிக அமைப்பு ) நடத்திய கலந்துரையாடல் பொழுது மதுரை திரு G S மணிஅவர்கள் பேசிய பேச்சின் பகுதி 3 இங்கு தரப்பட்டுள்ளது 
மெல்லிசை மன்னரின் மெட்டமைக்கும் திறனை பற்றியும் ,இசையே அவர் என்பதை மிக அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கிறார்.
தான் மெல்லிசை மன்னர் மற்றும் கவியரசுவிடம் பிரமித்து நின்ற தருணங்களை விவரிக்கிறார்.
 ஒரு துறையில் (கர்நாடக இசை )தான்மேன்மையுற இருந்தாலும் படைப்பாற்றலில் மெல்லிசை மன்னருக்கு முன் தான் ஒன்றுமில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகின்றார் திரு மணி 
இதோ உங்களின் பார்வைக்கு

https://youtu.be/tQbo2X-pCik

best Regards
vk


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register