Forum

மெல்லிசை மன்னரும் நடிகர் திலகமும்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
26/04/2019 8:17 am  

தமிழ் சினிமா உலகில் பேசும் படம் அறிமுகமாகி பாடல்கள் ஒலிக்கத் தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை ஆயிரக்கணக்கான இசையமைப்பாளர்கள் தங்களுடைய படைப்பாற்றலால் அருமையான பாடல்கள் மூலம் மக்களை மகிழ்வித்துள்ளார்கள். எல்லா இசையமைப்பாளர்களுக்குமே பாடல்கள் பிரபலமாகியுள்ளன. என்றாலும் எல்லாவற்றிலிருந்தும் தனித்து நின்று நம்மையெல்லாம் ஆட்கொண்டது மெல்லிசை மன்னரின் இசை என்பது அனைவரும் ஏற்கும் கூற்றாகும்.

 

என்னைப் பொறுத்தவரையில் அவருடைய ரசிகனாக .. இல்லை...வெறியனாக என்னை உருவாக்கியது அவருடைய பின்னணி இசையே. திரையரங்கை நோக்கி கால்கள் சென்றன என்றால் நடிகர் திலகம் மற்றும் மெல்லிசை மன்னர் என்ற இரு பெயர்களே.   தான் இசையமைத்த அத்தனை படங்களிலுமே தங்கள் உழைப்பை ஆத்மார்த்தமாக முழுமையுடன் அர்ப்பணித்தவர் மன்னர்.   அதில் நடிகர் திலகத்தின் படங்களில் அவருடைய பின்னணி இசை நம்மை மெய்ம்மறக்கச் செய்து காட்சியினுள்ளே அழைத்துச் சென்று விடும்.  அவ்வாறு இவ்விருவரின் இணையில் வெளியான பல படங்களில் இடம் பெற்ற மன்னரின் பின்னணி இசையைப் பற்றி என் அனுபவபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே இத்தலைப்பினை உருவாக்கியுள்ளேன். தங்கள் பின்னோட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
26/04/2019 8:18 am  

தொடக்கமாக உயர்ந்த மனிதன் படத்திலிருந்து ஒரு காட்சி.

 

இது Sivaji Ganesan - Definition of Style என்ற தலைப்பில் நான் இணையதளங்களில் பகிர்ந்து கொண்ட தொடரின் ஒரு பகுதியாகும். 

உயர்ந்த மனிதன் – ராஜலிங்கம் விமலா வாக்குவாதம்

 

One of the outstanding scenes in Tamil cinema History. 

என்னவொரு நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி!. ராஜலிங்கம் தன் மனதில் உள்ள குமுறலை கொட்டித் தீர்க்கும் போது பொங்கி வரும் ஆவேசத்தை மிகவும் சாதுர்யத்துடனும் கண்ணியத்துடனும், கட்டுப்படுத்தி, தன் கோபத்தையும் வெளிப்படுத்த வேண்டும், அதே சமயம் தன் கசப்பான கடந்த கால நினைவுகளையும் தனக்குள் வைத்துக்கொண்டு, மனைவியிடம் அன்புடன் நடந்து கொள்வதை அவளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அமர்க்களமான காட்சி. 1,46, 000 பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கடந்து இன்னும் அதிக அளவில் எல்லா தலைமுறையினரையும் ரசிக்க வைக்கும் காட்சி.  பாடல் காட்சிகளைத் தாண்டி நடிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட காட்சி அதிக அளவில் மக்களிடம் சென்று சேர்ந்து பிரபலமடைகிறது என்றால் அது நடிகர் திலகத்திற்கு மட்டுமே நிகழக்கூடிய அற்புதம். 

 

குறிப்பாக சொல்ல வேண்டியது, நடிகர் திலகம் தன் வேதனையை சொல்லிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில், சௌகார், நான் ஒண்ணு கேட்டால் நீங்க எதையோ உளருகிறீர்களே எனக் கேட்கிறார். அப்போது ஒரு கணம் அப்படியே விக்கித்து நிற்கிறார் நடிகர் திலகம்.  What a reaction conceived by NT! அப்படியே ஒரு கணம் ஒரு PAUSE தருகிறார். பிறகு ஹா.. என மூச்சு விடுகிறார்.. விரக்தியில், உளர்றேன் இல்லே என கேட்கிறார்... இந்த் வார்த்தைகளில் அவர் வெளிப்படும் உணர்வுகளே போதும்.. இவரை மிஞ்ச உலகில் யாருமே கிடையாது என்பதைச் சொல்ல.  ஆமாம் உளர்றேன் என்று கூறி தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொள்கிறார்.  பேச்சு வளர்ந்து சத்யமூர்த்தி பக்கம் திரும்புகிறது. எதுக்கெடுத்தாலும் சத்யமூர்த்தி என்று அலுத்துக் கொள்ளும் விமலா அவனை வீட்டை விட்டு விரட்டப்போறேன் என்று கோபமாக கூறுகிறார். அவருடைய கோபம் சத்யமூர்த்தி மேல் திரும்புகிறது.  இப்போது ஆரம்பிக்கிறது நடிகர் திலகத்திற்கும் எம்எஸ்விக்கும் இடையேயான போட்டி. அதுவரை அமைதியாக இருந்து அவர்கள் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் பெரிதாக வளர விட்டு மௌனத்தை பின்னணியில் ஓடவிட்ட மன்னர்,  இப்போது Take over செய்கிறார். சத்யமூர்த்தியை வீட்டை விட்டு விரட்டப் போகிறேன் என விமலா சொல்லும் போது ஒரு Piano Chord அழுத்தமாக இறங்குகிறது. இப்போது ராஜலிங்கம் அவளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் இழுத்து நிற்க வைக்கிறார். அப்போது பின்னணியில் வயலின் சன்னமாக ஒலிக்கிறது. ராஜலிங்கம் பளார் என அறைந்தவுடனே பின்னணி இசை வேகமெடுக்கிறது. ராஜலிங்கம் கோபம் குறையவில்லை. அவளைப் பார்க்கிறார். அப்போதும் அவருக்குள் இருக்கும் பச்சாதாபம் அவரை உறுத்துகிறது, அவளை அறைந்து விட்டோமே என வருந்துகிறது. இருந்தாலும் அவள் எதிர்த்துப் பேசி விட்டாளே என்ற ஈகோ அவரை ஆட்கொள்கிறது. கோபத்துடன் அறையை விட்டு வெளியேறுகிறார். கையைப் பார்ப்பதும் அவளைப் பார்ப்பதும் கோபத்தை அதிகப்படுத்துவதும் ...Oh God! What a method to rapidly change and increase the aggression in his face!!  எம்எஸ்வி கூடவே போட்டி போடுகிறார். Brush Drums மற்றும் Piano இணைந்த அழுத்தமான இசை ஒலிக்க, அதை.. அப்படியே Group Violin Take over செய்கிறது.

 

     Now follows another tough competition between NT and MSV! கண்களையும் காதுகளையும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிக்கும் இரு மேதைகள் அங்கே தங்கள் முழுத்திறமையையும் காட்டுகின்றனர். கதவைத் திறந்து வெகு வேகமாக படிக்கட்டுகிளில் நடிகர் திலகம் இறங்கும் போது அங்கே யாராவது நடிகர் திலகத்தை நினைவுபடுத்திக்கொண்டால் அவருக்கு சிறந்த விமர்சகர் பரிசு கொடுக்கலாம். அங்கே அனைவருமே சிவாஜியை மறந்து விடுவார்கள். Mr.Rajalingam owner of 7 mills கம்பீரமாக கோபத்துடன் தன் முழு ஈகோவையும் தன் மனைவி அசைத்துப்பார்த்து விட்டாளே என்கிற ஆத்திரம் கொப்பளிக்க நடக்கும் வேகம்... Terrific Performance!!!  அந்த வேகத்தை சற்றும் உணர்வு குறையாமல் காட்ட வேண்டும் என்பதை மன்னர் தீர்மானித்திருக்கிறார். வயலின் அப்படியே ஒவ்வொரு Phraseஆக மேலே போய்க்கொண்டே இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தில் ஆரோகணம் என சொல்வார்கள். அதில் ஏழு ஸ்வரங்கள் அதிக பட்சம், அவற்றை மேல் நோக்கி குறியீடுகளை கொண்டு சென்றால் கூட ஏழு முறை தான் போகும். ஆனால் இங்கு இந்த வயலின் Phrase களோ கிட்டத்த்ட்ட 20 முறைகளில் மேலே போய்க்கொண்டே இருக்கின்றன. Outstanding! Unimaginable!! இப்படி ஒரு உருவகத்தையும் அதை உணர்வுகளில் பிரதிபலிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும் கொண்ட இசைக்குறியீடுகளையும் உலகில் வேறு எந்த இசையமைப்பாளராவது படைத்திருப்பார்களா என்பது நிச்சயம் சந்தேகமே. நடிகர் திலகத்தின் அந்த வேகத்தை, அந்த உணர்வுபூர்வமான நடிப்பை, தன் இசையால் உயிரூட்டி பிரமிக்க வைக்கிறார் எம்.எஸ்.வி.  மேலே அறையின் கதவை விட்டு வெளியேறும் போது துவங்கும் வயலின் அதே போல் கீழே வாசல் கதவை திறந்து வெளியே வரும் போது, அங்கே சத்யமூர்த்தி ராஜலிங்கத்தை மறிக்க முற்படும் கட்டம் வரையில் தொடர்ந்து ஒலிக்கிறது.

 

     ராஜலிங்கம் காலில் சத்யமூர்த்தி விழுந்து, அவரை உள்ளே போகும் படி கெஞ்சும்போது, அப்படியே உருகுகிறார் ராஜலிங்கம். வந்த கோபம் அத்தனையையும் தனக்குள் மென்று விழுங்குகிறார். அப்படியே சாந்தமாகிறார். What a way to control the aggression! See how NT transforms his emotions and cools himself down and expressing it in his face!

 

                அப்படியே அதே வயலினை சாந்தமான உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இசைக்க வைக்கிறார் மெல்லிசை மன்னர். அதிலிருந்து இப்போது புல்லாங்குழல் Take over செய்கிறது. அந்த வேகம், அந்த கோபம், அந்த உக்கிரம் அத்தனையும் ஒரு நொடியில் அதே சமயம்  Progressiveஆக குறைகின்றது.

 

     ஜாவர் சீதாராமனின் வசனமும் காட்சியின் உணர்வுகளில் சிறிதும் குறுக்கிடாத அற்புதமான ஒளிப்பதிவும் படத்தொகுப்பும், காட்சியை சிறப்பாக வடிவமைத்த இயக்குநர்களின் திறமையும் இக்காட்சியை காவியமாக மிளிரும் அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன.

 

     நடிகர் திலகத்தின் ஈடிணையற்ற நடிப்பை ரசிப்பதா அல்லது மெல்லிசை மன்னர் என்ற மாமேதையின் இசை விருந்தைப் பருகுவதா என்று பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு இருவரும் கை கோர்த்து வெற்றி நடை போட்டுள்ள இக்காட்சியை ஒரு லட்சம் என்ன ஒரு கோடி பேர் யூட்யூபில் பார்த்தாலும் வியப்பில்லை.

 

     இது வரையிலும் சரி, இனி எக்காலத்திலும் சரி, உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு நடிப்பை பார்க்க முடியாது. இந்த நடிகர் திலகம் எனும் மாமேதையை எண்ணும் போது தமிழ்த்தாய் விஸ்வரூபம் எடுத்து விண்ணை நோக்கி அண்ணாந்து பார்த்து தலை நிமிர்ந்து கர்வத்துடன் கூறிக்கொள்வாள். சிவாஜி என் தவப்புதல்வன்! சிவாஜி ஒரு தெய்வமகன்! என்று.  அதே போல் இது வரையிலும் சரி, இனி எக்காலத்திலும் சரி, உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு பின்னணி இசையை நாம் அனுபவிக்க முடியாது.  மேலே நடிகர் திலகத்திற்குக் கூறிய அத்தனை வார்த்தைகளும் மன்னருக்கு பொருந்தும். 

 

இந்த இரு மேதைகளும் இணைந்து நமக்கு வழங்கிய அமுதசுரபியிலிருந்து அவ்வப்போது நாம் எடுத்துப் பருகுவோம். 

 

இக்காட்சிக்கான யூட்யூப் இணைப்பு -

 

https://www.youtube.com/watch?v=egOgIvjSxrM


ReplyQuote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 6 months ago
Posts: 41
27/04/2019 12:09 pm  

வீயார் சார்

உயர்ந்த மனிதன் படத்தில் நாற்பது வினாடிகள் ஒரு துணுக்கு வரும்

கால மாற்றம் பற்றி

மறக்கவே முடியாது..


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
28/04/2019 10:14 pm  

ஆமாம் ரவி சார். இந்த Transition சூழ்நிலை மாற்றத்தை மன்னர் சொன்ன விதம் மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கும்.  பல படங்களில் இது போன்ற Transition பின்னணி இசையை அவர் அழகாக கொண்டு வந்துள்ளார். அதைத் தனியே பிறிதொரு பதிவில் பார்ப்போம்.


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
25/05/2019 10:24 am  

இணையத்தில் முதன் முதலாக 

முதல் மனைவி இறந்து தந்தையின் கட்டாயத்தில் மறுமணத்திற்கு நாயகன் சம்மதிக்கும் போது ஏற்படும் உணர்வு, அதை அப்படியே கால மாற்றத்தில் நுழைத்து 19 ஆண்டு காலத்திற்குப் பின் காட்சி விரியக் கூடிய திரைக் கதையமைப்பை வலியுறுத்தி இசையிலேயே கதை சொன்ன சிறப்பைக் கேட்டுணர்வீர். 

கானடா ராகத்தில் கால மாற்றத்தையும் கொண்டு வந்து நாயகனின் உள்ளக் குமுறலையும் இணைத்து மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் இசை... 

என்னென்று சொல்வது ... எப்படி வர்ணிப்பது... 

 

Uyarnda Manidan Transition Scene


ReplyQuote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 6 months ago
Posts: 41
26/05/2019 11:06 am  

veeyaar sir,

thank you


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 49
01/10/2019 7:24 pm  

Great share.  Great work by Mannar. அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register