Forum

'கர்ணன்" படப்பாடல்கள்- ஒரு கண்ணோட்டம்... பகுதி - 1  

  RSS

P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 7 months ago
Posts: 36
20/05/2019 9:51 pm  

வருடம் 1964 - பொங்கல் திருநாள் அன்று பி. ஆர். பந்துலு அவர்கள் இயக்கி, தயாரித்து வெளிவந்த படம்தான் "கர்ணன்".

மிகுந்த பொருட்செலவில், வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க படத்தின் மாபெரும் வெற்றிக்கு பல காரணிகள் உண்டு.

பொருத்தமான நட்சத்திரத்தேர்வு, சிறப்பான நடிப்பு, அசத்தலான ஒளிப்பதிவு, அருமையான இயக்கம் என்று எல்லாமே இருந்தாலும், இன்றுவரை எல்லாவற்றையும் விஞ்சி நிற்பது ......

சந்தேகமில்லாமல் பாடல்கள் தான்

அனைத்துப்பாடல்களையும் செவிகளில் செந்தேனாக வார்த்தெடுத்து மெல்லிசை மன்னர்கள் கொடுத்த அழகு..

இன்று வரை எப்போது கேட்டாலும், பிரமிக்கவைக்கும் பாடல்கள்.

இரண்டே நாளில் கவியரசர் அனைத்துப்பாடல்களையும் எழுதி முடிக்க - மூன்றே நாட்களில் அவற்றுக்கு இசை வடிவம் கொடுத்த மெல்லிசை மன்னரின் மகத்தான சாதனையை மிஞ்ச இன்று வரை யாரும் பிறக்கவில்லை.

மூன்றே நாட்களில் அவர் போட்ட மெட்டுக்களும், அமைத்த பாடல்கள் அத்தனையும் ஐம்பத்தைந்து வருடங்களைக் கடந்தும் இன்னும் புத்தம் புதிதாக காற்றலைகளில் பவனி வரும் சாதனை இருக்கிறதே..

கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய எண்ண அலைகளை மனங்களில் பரவச்செய்கிறதே..

அவற்றைப்பற்றி எழுதவேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு தனி பிரிவே ஆரம்பிக்க வேண்டும்.

இங்கு நான் எழுத எடுத்துக்கொண்ட பாடலுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.

சாதாரணமாக வானொலியில் கேட்கும்போது இருப்பது போல "கர்ணன்" திரைப்படத்தைப் பார்க்கும்போது இந்தப் பாடல் இருக்காது.

காட்சியோடு இணைந்து வரவேண்டும் என்பதற்காக ஒட்டியும், வெட்டியும் இந்தப் பாடலை மூன்று பிரிவுகளாக பிரித்துப் படமாக்கி இருப்பார் பி.ஆர். பந்துலு.

நான்  வானொலி அமைப்பையே எடுத்துக்கொண்டு பாடலை - அதன் சிறப்பு அம்சங்களை - முடிந்தவரை - எனக்குத் தெரிந்த வரை பகிர்ந்துகொள்கிறேன்

சமுத்திரத் தண்ணீரை ஒரு டீஸ்பூனால் அளந்து எடுத்து வற்ற வைக்க முடியுமா ?

மெல்லிசை மன்னரின் சாதனைக்கு ஒரு இலக்கணம் வகுத்த "கர்ணன்" படப்பாடலின் சிறப்புக்களை நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது அதுபோலத்தான்.

"கொடைக்கு ஒரு கர்ணன்"  - என்று போற்றப்படும் கர்ணனின் வள்ளல்தன்மையை அழகாகஎளிமையாகக் கவியரசு கண்ணதாசன் அழகாக   வடிவமைக்க, அதற்கு உயிரோட்டமான இசையை மெல்லிசை மன்னர் அமைத்து காலத்தை வென்று நிற்கும் காவியப்பாடலாக அல்லவா தந்திருக்கிறார்!

கவியரசரின் கைவண்ணத்தோடு மெல்லிசை மன்னரின் இசை வண்ணத்தையும் சேர்த்து இப்போது அனுபவிப்போமா நண்பர்களே..

 

ReplyQuote
Share:
  
Working

Please Login or Register